Breaking News

ராமநாத சுவாமி கோயில் கோடி தீர்த்தம் விற்பனை; அடிக்கடி நிறுத்தம்: ஆன்லைனில் கூடுதல் விலைக்கு விற்பனை

ராமேசுவரம்: ராமேசுவரம் வரும் பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நீராடி விட்டு ராமநாத சுவாமி கோயிலுக்குள் உள்ள 22 புனிதத் தீர்த்தங்களில் நீராடுவது வழக்கம். இதில் 22-வது தீர்த்தமான கோடி தீர்த்தத்தில் நீராடியதன் மூலம் அனைத்து தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதனால் பல ஆண்டுகளாக தேவஸ்தானம் சார்பாக 500 மில்லி கோடி தீர்த்தம் கோயிலில் ரூ.20-க்கு பாட்டிலில் விற்பனை செய்தனர். இதை பக்தர்கள் வாங்கிச் சென்று வீடு, கடை, தொழில், வர்த்தக நிறுவனங்களில் பூஜை உள்ளிட்ட புனித காரியங்களுக்கு பயன்படுத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rDseLm7Q2
via

No comments