மகளிர் உலகக் கோப்பை: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்த முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்தியா

நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகின்றன. ஹாமில்டன் நகரில் உள்ள Seddon பார்க் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ், பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி இந்திய அணிக்காக ஸ்மிருதி மந்தனா மற்றும் யாஸ்திகா பாட்டியா ஒப்பனர்களாக களம் கண்டுள்ளனர். உலகக் கோப்பைக்கான இந்த முதல் சுற்றுப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றியும், நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் தோல்வியும் தழுவியிருந்தது. மறுபக்கம் வெஸ்ட் இண்டீஸ் அணி முறையே நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளை வீழ்த்தியுள்ளது. இருப்பினும் இந்தியாவுடனான பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் விளையாடும் இந்திய அணி விவரம்: யாஸ்திகா பாட்டியா, ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்ப்ரீத் கவுர், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, பூஜா வஸ்த்ரகர், ஜூலன் கோஸ்வாமி, மேக்னா சிங், ராஜேஸ்வரி.
5 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 41 ரன்களை எடுத்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/AjFfYRQ
via
No comments