Breaking News

ஐபிஎல்: குஜராத் டைட்டனஸ் தொடக்கமே குழப்பம் - முக்கிய வீரர் பங்கேற்பதில் சிக்கல்

கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி இங்கிலாந்து வீரர் ஜேசன் ராயை ஏலத்தில் 2 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. இந்த நிலையில் அவர் எதிர்வரும் ஐபிஎல் 15-வது சீசனில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதிரடி தொடக்க வீரரான ராய் கடந்த 2017 முதல் ஐபிஎல் களத்தில் விளையாடி வருகிறார். 

image

அண்மையில் நிறைவு பெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஆறு போட்டிகளில் விளையாடி 303 ரன்கள் எடுத்திருந்தார் அவர். கடந்த ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணிக்காக அவர் சிறப்பாக விளையாடி அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

பயோ-பபூள் காரணமாக ராய் இந்த சீசனில் பங்கேற்க போவதில்லை என அவர் சொல்லி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது குஜராத் அணி அவருக்கு மாற்று வீரராக வேறு ஒரு வீரரை ஒப்பந்தம் செய்ய வேண்டியுள்ளது. வரும் 26-ஆம் தேதி தொடங்கி மே 29 வரை ஐபிஎல் தொடர் நடக்க உள்ளது. இந்த முறை இரண்டு குழுக்களாக போட்டிகள் நடைபெற உள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/0znJGDj
via

No comments