திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் கடன் பிரச்சினையால் பெண் தற்கொலைக்கு முயற்சி: காவல் துறையினர் கட்ட பஞ்சாயத்து செய்வதாக குற்றச்சாட்டு

கடன் பிரச்சினையில் காவல் துறையினர் கட்ட பஞ்சாயத்து செய்து மிரட்டுவதாக கூறி, தி.மலை ஆட்சியர் அலு வலக வளாகத்தில் நேற்று மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு பெண் ஒருவர் தற் கொலைக்கு முயன்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
தி.மலை கிரிவலப் பாதை குபேர நகரில் வசிப்பவர் தென்றல். இவர், திருவண் ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு நேற்று தற்கொலைக்கு முயன்றார். அவரது செயலை பணியில் இருந்த காவல்துறையினர் தடுத்து, விசாரணை நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3C7v6KQ
via
No comments