அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்து தமிழகம், கேரளம் சாதனை - தேசிய சராசரியைவிட குறைவு

சென்னை: அத்தியாவசியப் பொருட்களின் விலையை தேசிய சராசரியை விட குறைவான அளவில் தக்கவைத்து தமிழகமும், கேரளாவும் சாதனை படைத்துள்ளன.
நாட்டில் உள்ள மக்கள், தாங்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மற்றும் அவர்கள் பயன்படுத்தும் சேவைகளின் கட்டணங்களை கணக்கிடுவதே நுகர்வோர் விலைக் குறியீடு (கன்ஸ்யூமர் பிரைஸ் இன்டெக்ஸ்) என்பதாகும். இதை வைத்து நாட்டின் பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலைமை கணக்கிடப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் 6.2 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஏப்ரலில் 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கவலையளிக்கும் விஷயம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://www.hindutamil.in/news/tamilnadu/802108-consumer-price-index-tamil-nadu-and-kerala-achieves.html?frm=rss_more_article
via
No comments