Breaking News

முதல் டி20: டாஸ் வென்ற இந்திய அணி - இங்கிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்யுமா?

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் கடந்த 1-ம் தேதி முதல் விளையாடியது. அதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இங்கிலாந்து, தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. இதைத் தொடர்ந்து, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. டி20 தொடரின் முதல் ஆட்டம் சவுத்தாம்ப்டனில் ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று இரவு 10.30 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி பவுலிங்கில் களமிறங்குகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால், தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் நம்பிக்கையுடன் இந்தப் போட்டியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

image

அதேநேரத்தில், கடுமையான இலக்கு நிர்ணயித்தும் இந்தியாவை கடைசி டெஸ்ட் போட்டியில் தோற்கடித்து, தொடரை சமனில் கொண்டு சேர்த்தது இங்கிலாந்து அணிக்கு கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது.

இந்திய அணி வீரர்கள் :

ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்

இங்கிலாந்து அணி வீரர்கள் :

ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர், கேப்டன்), டேவிட் மாலன், மொயின் அலி, விலிங்ஸ்டன், ஹாரி ப்ரூக், சாம் கரன், கிறிஸ் ஜோர்டன், டைமல் மில்ஸ், டாப்லே, மாத்யூ பார்கின்சன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/30hUCOa
via

No comments