Breaking News

தொழிற்சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு - பஸ் ஊழியருக்கு 5% ஊதிய உயர்வு; ஒப்பந்த காலம் 4 ஆண்டுகளாக மாற்றம்

சென்னை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றும், ஒப்பந்த காலம் 4 ஆண்டுகளாக மாற்றப்படுவதாகவும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 1.20 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை போடப்பட்டு வந்தது. 13-வது ஊதிய ஒப்பந்தம், கடந்த 2019-ம் ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் காலாவதியானது. பல்வேறு காரணங்களால் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தாமதமாகி வந்தது. அதன்பின் தொழிற்சங்கங்களுடன் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடந்து வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Sfc6kdF
via

No comments