Breaking News

ஆசிய கோப்பை | 1019 நாட்களுக்குப் பிறகு விராட் கோலி சதம் - புவனேஷ்வரின் அட்டாக்கில் வீழ்ந்த ஆப்கன்

துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது இந்திய அணி. இந்தப் போட்டியில் 1019 நாளுக்கு சதம் விளாசினார் இந்திய அணியின் விராட் கோலி.

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பிலிருந்து இந்திய அணி ஏற்கனவே வெளியேறிவிட்டது. சம்பிரதாய மோதலாக இன்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ரோஹித்திற்கு பதிலாக கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வென்ற ஆப்கன் கேப்டன் முகமது நபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணியின் ஓப்பனர்களாக ராகுல் உடன் கோலி களமிறங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7o3e0LH

No comments