Breaking News

பயிற்சி ஆட்டத்தை 'சீரியஸாக' எடுத்துக்கொள்ளுமா இந்தியா? ஆஸி.யுடன் சற்று நேரத்தில் மோதல்

டி20 உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு பயிற்சி ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளது. நேரடியாக 'சூப்பர்-12' சுற்றில் நுழையும் இந்திய அணி வரும் 23-ம் தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதனிடையே 'சூப்பர்-12' சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ள 8 அணிகளும் தலா 2 பயிற்சி போட்டிகளில் மோதுகின்றன. அதன்படி இந்திய அணி இன்று பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுடன் பயிற்சி போட்டியில் ஆடுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது.

image

இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட அனைத்து முன்னணி வீரர்களும் இந்த பயிற்சி ஆட்டத்தில் களம் காணுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பும்ராவுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள முகமது ஷமியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.  
இது பயிற்சி போட்டி என்றாலும் கூட விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்பதில் சந்தேகமில்லை. மற்றொரு பயிற்சி போட்டியில் வரும் 19ம் தேதி நியூசிலாந்துடன் இந்தியா மோத உள்ளது.

தையும் படிக்கலாமே: 'டி20 உலகக்கோப்பையை விட பும்ராவின் கிரிக்கெட் கரியர் மிக முக்கியம்' - ரோகித் சர்மா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/FoVfxT6
via

No comments