8ம் தேதி கப்பலூர் டோல்கேட்டை முற்றுகையிடும் போராட்டம்: சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு
மதுரை: திருமங்கலத்தில் நடந்த சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வரும் 8ம் தேதி கப்பலூர் டோல்கேட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளனர். செங்கோட்டை முதல் திருமங்கலம் வரையிலான வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பங்கேற்கின்றனர்.
நான்கு வழிச் சாலைகளை பொறுத்தவரையில் 60 கி.மீ தொலைவிற்குள் ஒரு டோல்கேட் இருக்க வேண்டும் என்ற தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் விதிமுறை உள்ளது. இதை மீறி திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட் அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி உள்ளூர் மக்கள், வாகன ஒட்டிகள் கடந்த பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதற்கு தற்போது வரை விடிவு காலம் ஏற்படவில்லை. அதனால், அடிக்கடி கப்பலூர் டோல்கேட்டில் வாகன ஓட்டிகளுக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டு துப்பாக்கி சூடு சம்பவம் நடக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wPNKYsp
via
No comments