தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கட்டாய கரோனா பரிசோதனை செய்யக் கூடாது - தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை
சென்னை: தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கட்டாய கரோனா பரிசோதனை செய்வதை நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் பல மாதங்களுக்கு முன்பே கரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு விலக்கியதோடு, கரோனா தடுப்பூசி முகாம்களையும் நிறுத்திவிட்டது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என்பது மட்டும் தொடர்கிறது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.700 கட்டணம் செலுத்தி கரோனா பரிசோதனை செய்யுமாறு கட்டாயப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QHpmsIJ
via
No comments