கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கலுக்கு ஆவின் சிறப்பு இனிப்புகள் விற்பனை: அமைச்சர் சா.மு.நாசர் அறிவிப்பு
சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவின் சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யப்படும் என பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார். இந்தியாவின் ‘வெண்மைப் புரட்சியின் தந்தை’ என்று அழைக்கப்படும் டாக்டர் வர்கீஸ் குரியன் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் நவம்பர் 26-ம் தேதி, தேசிய பால் தினமாக 2014-ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.
தேசிய பால் தினத்தையொட்டி, நேற்று சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லம் வளாகத்தில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் தேசிய பால் தின கொண்டாட்டம் மற்றும் விற்பனை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cTZS1FJ
via
No comments