Breaking News

காயங்களால் 3வது தொடரில் இருந்து விலகும் 3 வீரர்கள்; பிசிசிஐ-யை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

வங்கத் தேசத்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி வீரர்களான ரோகித் சர்மா, தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகியோர் காயம் காரணமாக விளையாடுவது கடினம் என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் கடந்த 4-ம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவி, ஒருநாள் தொடரை வங்கதேசத்திடம் இழந்தது.

இந்நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்சில் பவுலிங் செய்தபோது 3 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் தீபக் சாஹர் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக பீல்டிங் செய்ய சப்ஸ்ட்யூட்டாக ராகுல் திரிபாதி வந்தார். எனினும், பேட்டிங் செய்ய களமிறங்கிய தீபக் சாஹர் 18 பந்துகளை சந்தித்து 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனினும், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காயம் காரணமாக கடந்த ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை டி20 தொடரை மிஸ் செய்த தீபக் சாஹர் தற்போது அடுத்த ஒருநாள் போட்டியில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

image

இதேபோல் பீல்டிங் செய்துக்கொண்டிருந்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, பாதியில் வெளியேறிய நிலையில், பின்னர் களத்தில் கடைசியாக இறங்கி அரைசதம் எடுத்தார். அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் குல்தீப் சென்னுக்கு முழு உடற் தகுதி இல்லாததால், இந்தப் போட்டியில் களமிறங்கவில்லை. ஏற்கனவே காயம் காரணமாக முகமது ஷமி, வங்கதேசத் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், மேலும் 3 வீரர்கள் காயமடைந்துள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்நிலையில் போட்டிக்குப் பின் பேசிய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட், “அணியில் ஒரு சிலருக்கு ஏற்பட்டுள்ள காயங்களால் தொடர்ந்துப் போராடி வருகிறோம். இது சிறந்தது கிடையாது. குல்தீப், தீபக் மற்றும் ரோகித் நிச்சயமாக அடுத்த ஆட்டத்தில் விளையாட மாட்டார்கள். ரோகித் அடுத்த ஆட்டத்தை தவறவிடுவார். அவர் மீண்டும் மும்பைக்குச் சென்று, மருத்துவ நிபுணரிடம் ஆலோசனைப் பெற உள்ளார். அவர் டெஸ்ட் தொடருக்கு திரும்புவாரா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை. தற்போது அதைப் பற்றி தற்போது கூற முடியாது” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் பிசிசிஐ-யை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/SQKCLIa
via

No comments