Breaking News

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.406 கோடியில் 4,644 புதிய குடியிருப்புகள் - முதல்வர் திறந்துவைத்தார்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 8 மாவட்டங்களில் ரூ.406 கோடியில் கட்டப்பட்டுள்ள 4,644 அடுக்குமாடிக் குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டம் கண்ணன்கரடு, நேதாஜி நகர், நஞ்சை ஊத்துக்குளி, இச்சிப்பாளையம், குமரன் நகர் பகுதிகளில் ரூ.101.04 கோடியில் 1,176 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cJe8f6
via

No comments