Breaking News

சூறைக்காற்றுடன் கரையை கடந்தது ‘மேன்டூஸ்’ புயல்; 6 பேர் பரிதாப உயிரிழப்பு - நிவாரண முகாம்களில் 9 ஆயிரம் பேர் தஞ்சம்

சென்னை: வங்கக் கடலில் நிலவிய ‘மேன்டூஸ்' புயல் நேற்று அதிகாலை மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. புயல் பாதிப்பால் 6 பேர் உயிரிழந்தனர். 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அந்தமான் அருகே கடந்த 5-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, கடந்த 7-ம் தேதி 'மேன்டூஸ்' புயலாக வலுவடைந்தது. பின்னர், கடந்த 8-ம் தேதி தீவிரப் புயலாக வலுப்பெற்று, 9-ம் தேதி மீண்டும் புயலாக வலு குறைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jhPbgl4
via

No comments