அதிமுக முன்னாள் எம்பி ராதாகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் மரணம்
சிவகாசி: சிவகாசியில் முன்னாள் அதிமுக எம்பி டி.ராதாகிருஷ்ணன் (67) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
ராதாகிருஷ்ணன் கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுகவில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பல்வேறு பதவிகள் வகித்த ராதாகிருஷ்ணன் தற்போது விருதுநகர் மேற்கு மாவட்ட துணை செயலாளராக உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RIEJHMo
via
No comments