பாகிஸ்தானில் இங்கிலாந்து வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டல் அருகே துப்பாக்கிச்சூடு?
பாகிஸ்தான் நாட்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டல் அருகே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ராவல்பிண்டியில் கடந்த 1ஆம் தேதி தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து அணி வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வியாழக்கிழமை காலையில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டதாகவும், உள்ளூர் கோஷ்டி சண்டையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தி டெலிகிராப்பில் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தாக்கப்பட்ட பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் பாதுகாப்பானது அல்ல என பல நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்தன. அதனால், தங்கள் அணியினரை பாகிஸ்தானுக்கு அனுப்ப அனைவரும் தயங்கினர். இதையடுத்து பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டி நடத்த பல்வேறு முயற்சிகள் நடைபெற்றன. 'தங்கள் நாட்டில் பாதுகாப்பு பிரச்னை ஏதும் இல்லை’ என்று பாகிஸ்தான் உறுதியளித்ததைத் தொடர்ந்து இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி இருக்கின்றன.
பாகிஸ்தானுக்கு வரும் வெளிநாட்டு அணிகளுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் 17 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறது.
தவற விடாதீர்: கேட்ச் பிடிக்கும்போது கீழே தெறித்து விழுந்த 4 பற்கள்.. ரத்தம் வழிய வெளியேறிய இலங்கை வீரர்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/p2FLrYR
via
No comments