Breaking News

கடைசி 15 நிமிடங்களில் பரபரப்பான ஆட்டம்.. வேல்ஸை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி அசத்தல் வெற்றி!

ஒடிசாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் ஒடிசாவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடர் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் உள்ள 4 அணிகளும், மற்ற் மூன்று அணிகளுடனும் தலா ஒரு போட்டியில் விளையாடும். இதில், குரூப்பில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். அதன்படி, குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அடுத்து, இங்கிலாந்துடன் நடைபெற்ற இரண்டாவது போட்டியை டிரா செய்தது.

image

இந்த நிலையில் இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, வேல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டி புவனேஷ்வரில் உள்ள ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. ரசிகர்களின் பலத்த ஆதரவால் இந்திய அணி 21வது நிமிடத்திலேயே முதல் கோலை பதிவு செய்து முன்னிலை பெற்றது. அடுத்ததாக 32வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தது. இதற்குப் பதிலடியாய் வேல்ஸ் அணி, 42 மற்றும் 44வது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்தது.

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொள்ள கடைசி 15 நிமிடங்களில் அதாவது, 45 மற்றும் 59வது நிமிடங்கள் அடுத்து இரண்டு கோல்களை அடித்து 4-2 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா வெற்றிபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் ஆகாஷ் தீப் இரண்டு கோல்களை பதிவு செய்து அசத்தினார்.இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப்-டி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. கோல்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி கிராஸ் ஓவர் சுற்றில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக வரும் 22ஆம் தேதி விளையாடுகிறது. இதில் வெற்றி பெற்றால் காலிறுதியில் குரூப்-பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியுடன் இந்தியா விளையாடும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/IBoLXyG
via

No comments