Breaking News

மைதானத்தில் ஓடிவந்து ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்த சிறுவன் - வைரல் வீடியோ

ரோகித் சர்மாவின் ரசிகர் ஒருவர் மைதானத்தில் ஓடி வந்து அவரை கட்டிப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராய்ப்பூரில் இன்று நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்தப் போட்டியின் போது ரோகித் சர்மாவின் ரசிகர் ஒருவர் மைதானத்தில் ஓடி வந்து அவரை கட்டிப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

image

ரோகித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 9-வது ஓவரில் அவரை நோக்கி ஒரு சிறுவன் வேகமாக ஓடிவந்து கட்டிப்பிடித்தார். சிறுவன் ஓடி வருவதை கண்ட மைதானத்தில் இருந்த பாதுகாவலர்கள் பின்னாடியே ஓடி வந்து அந்த சிறுவனை தூக்கிச் சென்றனர். எனினும் அவரை எதுவும் செய்ய வேண்டாம் என்றும் பாதுகாப்பாக மைதானத்திலிருந்து வெளியேற்றுங்கள் என்று ரோகித் சர்மா கேட்டுக்கொண்டார்.

இதேபோன்று ரோகித் சர்மாவின் ரசிகர்கள் மைதானத்தில் அத்துமீறி நுழைவது இது முதல்முறை அல்ல. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து தான் வருகிறது. இதனால் வீரர்களின் பாதுகாப்பில் கேள்விக்குறி எழுந்துள்ளதாக அவ்வப்போது பல முன்னாள் வீரர்களும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/LO7Nijd
via

No comments