Breaking News

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - நடால் அதிர்ச்சி தோல்வி

மெல்பர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 65-ம் நிலை வீரரான அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்டை எதிர்த்து விளையாடினார். 36 வயதான நடால் ஆட்டத்தின் இடையே இடுப்பு பகுதியில் ஏற்பட்ட வலியால் அவதிப்பட்டார்.

இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு விளையாடிய நடால் 4-6, 4-6, 5-7 என்ற நேர் செட்டில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று குவித்துள்ள ரபேல் நடால் கடந்த 7 ஆண்டுகளில் பெரிய அளவிலான தொடரில் தொடக்க நிலையிலேயே வெளியேறுவது இதுவே முதன்முறை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/69IrTaA

No comments