`அஜித்தெல்லாம் வேண்டாம்...’ - 4வது முறையாக இணையும் விஜய், அட்லீ கூட்டணி?
‘தளபதி 68’ படத்தில் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லீ, 4-வது முறையாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வம்சி பைடிபள்ளியின் ‘வாரிசு’ வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் அடுத்ததாக, தனது 67-வது படத்தில் நடித்து வருகிறார். ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ, கடந்த 3-ம் தேதி யூ-ட்யூப் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. சென்னை, கொடைக்கானல் ஆகிய இடங்களைத் தொடர்ந்து படக்குழுவினர், தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பில் உள்ளனர். இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
இந்தப் படம் ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு வருகிற அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய 3 வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் அட்லீ, ‘தளபதி 68’ படத்திற்காக இணைய உள்ளதாக ‘பிங்க் வில்லா’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அட்லீ சொன்ன கதையை நடிகர் விஜய் ஓகே செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
#LEO
— Seven Screen Studio (@7screenstudio) February 3, 2023
It's going to be a #BLOODYSWEET ride #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @Jagadishbliss pic.twitter.com/FLjsPltIiX
ஷாருக்கானின் நடிப்பில், அட்லீ தற்போது இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்து, ஜூன் 2-ம் தேதி படம் வெளியாகிறது. இந்தப் படம் ரிலீசானதும், விஜய்யின் ‘தளபதி 68’ படத்திற்காக திரைக்கதை அமைக்கும் பணியில் அட்லீ கவனம் செலுத்த உள்ளதாகவும், வருகிற செப்டம்பர் அல்லது அக்டோபரில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும், ‘லியோ’ படத்தை முடித்ததும், ‘தளபதி 68’ மட்டுமின்றி, ‘தளபதி 69’, ‘தளபதி 70’ ஆகியப் படங்களுக்காக விஜய், கதை கேட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. முன்னதாக, அஜித்தின் ‘ஏகே 62’ படத்திற்குப் பிறகு, அவரின் ‘ஏகே 63’ படத்தை அட்லீ இயக்க உள்ளதாக தகவல் வெளியானநிலையில், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில்தான், முன்புக் கூறியதுபோல், 4-வது முறையாக மீண்டும் விஜய் - அட்லீ கூட்டணி இணையவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/Ph0EGzq
No comments