5 ஆண்டாகியும் குறைந்தபட்ச ஊதிய அரசாணை நிறைவேற்றப்படவில்லை - மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் அதிருப்தி
மதுரை: 5 ஆண்டிற்கு முன் குறைந்தபட்ச ஊதிய அரசாணை நிர்ணயித்த தினசரி ஊதியம் ரூ.721 தற்போதுவரை தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்று மாநகராட்சி தொழிலாளர்கள் குறைந்தப்பட்ச ஊதியக்குழுவிடம் ஆட்சேபம் தெரிவித்தனர்.
மதுரை மாநகராட்சியில் தினக்கூலி, ஒப்பந்த பணியில் தூய்மைப்பணியாளர்கள், அபேட் மருந்து தெளிப்பு பணியார்கள், பாதாள சாக்கடைப் பணியாளர்கள், பிட்டர்கள், கழிவு நீரேற்று நிலையம் மற்றும் கனரக வாகன ஓட்டுனர்கள், காவலாளிகள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களில் தினக்கூலி பணியாளர்களுக்கு மாநகராட்சியும், ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஒப்பந்த நிறுவனங்களும் ரூ.509 ஊதியம் வழங்குகிறார்கள். அபேட் மருந்து தெளிப்பு ஒப்பந்த பணியாளர்களுக்கு மட்டும் ரூ.350 மிக குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FAM7TBk
via
No comments