Breaking News

மத்திய அரசுக்கு ஆதரவாக உத்தவ் தாக்கரேவுக்கு பதில் அளித்த சரத் பவார்... என்ன நடந்தது?!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமீபத்தில் வெளியிட்ட சுயசரிதையில், உத்தவ் தாக்கரே நிர்வாக திறன் இல்லாததால் தான் சிவசேனா உடைந்ததாக குற்றம் சாட்டி இருந்தார். அதோடு மும்பையை மத்திய அரசு மகாராஷ்டிராவில் இருந்து பிரிக்க முயற்சிக்கிறது என்று அடிக்கடி உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டி வருகிறார். அதற்கும் சரத் பவார் தனது சுயசரிதையில் பதிலளித்துள்ளார். அதில், ``மத்தியில் யாரும் மும்பையை மகாராஷ்டிராவில் இருந்து பிரிக்க விரும்பவில்லை.. எனவே அது போன்ற விவாதங்க்களை அனைவரும் தவிர்க்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தவ் தாக்கரே, ``மும்பையை மத்திய அரசு பிரிக்க முயற்சிக்கிறது என்ற எனது கருத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. இதில் எங்களுக்குள் மாறுபட்ட கருத்து இருந்தாலும் எங்களது கூட்டணியின் ஒற்றுமைக்கு எந்த வித பாதிப்பும் வரப்போவதில்லை” என்று குறிப்பிட்டார். உத்தவ் தாக்கரேயின் கருத்தை காங்கிரஸ் கட்சியும் ஆமோதித்துள்ளது. இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே அளித்த பேட்டியில், ``மத்திய அரசு மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் முக்கியத்துவத்தை குறைக்க முயற்சிக்கிறது. மும்பை நாட்டின் நிதி தலைநகரமாக இருக்கிறது.

அதோடு உலகின் மிகவும் முக்கியமான நகரமாகவும் விளங்குகிறது. அனைத்து நிதி நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களும் மும்பையில் இருக்கிறது. இது பா.ஜ.க.தலைவர்களுக்கு எரிச்சலாக இருக்கிறது. எனவேதான் முக்கிய அலுவலங்களை குஜராத்திற்கு மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். மும்பை மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து பல திட்டங்கள் குஜராத்திற்கு சென்று இருக்கிறது. மகாராஷ்டிராவுக்கு தேவைப்படாத புல்லட் ரயில் திட்டம் மகாராஷ்டிரா மீது திணிக்கப்படுகிறது. பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் அமைய இருந்த இண்டர்நேசன் பைனாசியல் சர்வீஸ் சென்டர் காந்தி நகருக்கு மாற்றப்பட்டுள்ளது. அதிகப்படியான வைர வர்த்தகம் குஜராத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

சரத் பவார்

மும்பையை குஜராத்திற்கு கொண்டு செல்ல முடியாது என்பதால் மும்பையை அழிக்க பா.ஜ.க முயற்சிக்கிறது” என்று நானா பட்டோலே குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து அடுக்கிக்கொண்டே சென்றார். சிவசேனாவும்(உத்தவ்), `மத்திய அரசின் கொள்கை குஜராத்திற்கு சாதகமாகவும், மகாராஷ்டிராவிற்கு பாதகமாகவும் இருக்கிறது, பா.ஜ.க.வின் வளர்ச்சிக்காக மகாராஷ்டிரா நகரங்கள் அழிக்கப்படுகிறது’ என குற்றம் சாட்டி இருக்கிறது.



from India News https://ift.tt/JfdMZPH

No comments