Breaking News

இன்டர்காண்டினென்டல் கால்பந்து கோப்பை | இந்தியா - மங்கோலியா இன்று பலப்பரீட்சை: சுனில் சேத்ரி மீது அதிக எதிர்பார்ப்பு

புவனேஷ்வர்: இந்தியா, லெபனான், மங்கோலியா, வனுவாட்டு ஆகிய 4 நாடுகள் கலந்து கொள்ளும் இன்டர்காண்டினென்டல் கோப்பைக்கான கால்பந்து தொடர் இன்று (9-ம் தேதி) தொடங்கி வரும் 18-ம் தேதி வரை ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொண்டுள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

கத்தாரில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கால்பந்து கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாகவே இந்திய அணி இன்டர்காண்டினென்டல் கோப்பை தொடரில் கலந்து கொள்கிறது. இந்தத் தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு மங்கோலியாவுடன் மோதுகிறது. முன்னதாக தொடரின் முதல் ஆட்டத்தில் லெபனான்–வனுவாட்டு அணிகள் மோத உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/96Gcy4n

No comments