Breaking News

ஒன ப ட: மககள ஏமறற ஆடசகக வநதவர ஸடலன!' - எடபபட பழனசமயன வமரசனம சரய?

இராஜீவ் காந்தி, மாணவரணித் தலைவர், தி.மு.க.

“ ‘கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன், ஈபிள் டவர் ஏறி ஏரோப்ளேனைப் பிடிக்கப் போனானாம்...’ அப்படித்தான் இருக்கிறது அவரின் கருத்து. கொல்லைப்புறமாகப் பதவிக்கு வந்தது யாரென்பது உலகறிந்த செய்தி. தரையில் தவழ்ந்து சென்று, சசிகலாவின் காலில் விழுந்து ஆட்சிப் பொறுப்பைப் பெற்றவர்தானே இந்த எடப்பாடி... அதை அவராலேயே மறுக்க முடியாதே. அப்படித் தன்னைப் பதவிக்குக் கொண்டுவந்த சசிகலாவுக்கு துரோகமும் செய்தவர் எடப்பாடி. ஆனால், தளபதி ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, மக்களைச் சந்தித்து முறைப்படி தேர்தலைச் சந்தித்து ஆட்சிப் பொறுப்பேற்றவர். தளபதி குறித்துப் பேச, குறுக்குவழி பழனிசாமிக்கு என்ன தார்மிகத் தகுதி இருக்கிறது... பழனிசாமியின் ஆட்சியில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டமைப்பும் சிதைக்கப்பட்டது. பா.ஜ.க-வின் கைப்பாவையாக மாறியதால் மாநில உரிமைகள் பறிபோயின. ஆனால், இன்று மாநிலத்தை வளர்த்தெடுத்து, ஒன்றிய அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து தைரியமாகப் போராடிக்கொண்டிருப்பவர் முதல்வர் ஸ்டாலின். எடப்பாடி தன் அரசியல் தோல்வியை மறைத்து, இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள மேடைக்கு மேடை உளறிக்கொண்டிருக்கிறார்!”

இராஜீவ் காந்தி, கல்யாணசுந்தரம்

கல்யாணசுந்தரம், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க.

“நேர்மையான விமர்சனம். அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று செய்யவே முடியாத பொய்களைச் சொல்லி மக்களை நம்பவைத்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். நகைக் கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து, மகளிர் உரிமைத்தொகை எனச் சொன்ன எதையாவது உருப்படியாகச் செய்திருக்கிறார்களா... `மதுக்கடைகளை மூடுவோம்’ என்று கனிமொழி பேசினார். ஆனால், தற்போது தமிழ்நாடு முழுவதும் 24 மணி நேரமும் சாராயம் ஆறாக ஓடுகிறது. சட்டவிரோத டாஸ்மாக் பார் பிரச்னை பூதாகரமானதும் பெயருக்குச் சில கடைகளை மூடியிருக்கிறார்கள். பி.டி.ஆர் பேசியதாக வெளியான ஆடியோ பொய்யானதென்றால், அதைப் பரப்பியவர்கள்மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை... தமிழ்நாட்டில் 31 வருடங்களாக ஆட்சியிலிருந்த அ.தி.மு.க ஒருபோதும் சொத்து வரியை உயர்த்தியதே இல்லை. ஆனால், மத்திய அரசு சொல்கிறது என்று எல்லாக் கட்டணங்களையும் மனம்போன போக்கில் உயர்த்திக்கொண்டிருப்பது இவர்கள்தானே... ஊழல் செய்து கொள்ளையடிப்பதை மட்டுமே கொள்கையாக வைத்திருக்கிறார்கள். வரும் காலங்களில் ஒவ்வொரு தி.மு.க அமைச்சரும் ஊழல் வழக்கில் கைதாவதை நாம் பார்க்கத்தான் போகிறோம்!”



from India News https://ift.tt/KIqkQyT

No comments