Breaking News

WI vs IND | முதல் டெஸ்ட்டில் சதம் கண்ட ஜெய்ஸ்வால் - செஞ்சுரிக்கு அடுத்த பந்தே ரோகித் அவுட்

டொமினிகா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதேபோல், இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மாவும் சதம் அடித்தார்.

215 பந்துகளைச் சந்தித்த ஜெய்ஸ்வால் 11 பவுண்டரிகளுடன் தனது முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார். டொமினிகாவில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. மேற்கு இந்தியத் தீவுகளின் ஆலிக் அதானஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 47 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gcwlT5J

No comments