``ஒரு தமிழர் பிரதமராவதை `ப்ரவுட் கன்னடிகா அண்ணாமலை’ விரும்பவில்லை போல!” - அதிமுக கடும் தாக்கு
கூட்டணி முறிந்ததிலிருந்து மோதிக் கொள்ளமால் இருந்த அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் ஒருமாதத்துக்கு பிறகு இப்போதுதான் சாட்டையை சுழற்ற ஆரம்பித்திருக்கின்றனர். `எடப்பாடி பழனிசாமி பிரதமராகும் தகுதியுடையவர்’ என அ.தி.மு.கவினரின் ஸ்டேட்மென்டுக்கு நகைத்தபடி பதிலளித்து கடந்திருக்கிறார் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை. இது அ.தி.மு.கவினரை கொதிப்படைய செய்துள்ளது. இதுகுறித்து விசாரித்தோம்.
நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், ``அ.தி.மு.கவின் 52-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது அ.தி.மு.க. அந்தவகையில் விருதுநகர் பொதுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, `அ.தி.மு.க 40 தொகுதிகளிலும் வென்றால் எடப்பாடி பிரதமராவார்’ எனப் பேசியிருந்தார்.
இது குறித்து கேள்வி எழுப்பிய போது, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை `சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தார். இதேபோல் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், ``ராஜேந்திர பாலாஜி சிரிக்கும்படியாக பேசுவார். இப்போதும் அப்படித்தான் என விமர்சித்தார். மற்றொரு கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி `எடப்பாடி பிரதமராக வரவேண்டுமென்றால் சிலர் இங்கே சிரிக்கிறார்கள்’ என காட்டமாகப் பேசியது பெரும் விவாதபொருளானது.” என்றனர்,
எடப்பாடியை பிரதமர் அந்தஸத்தில் வைத்து பேசினால் சிரிக்கிறாரே அண்ணாமலை என பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் கார்த்தியாயினியிடன் கேட்டோம், ``அ.தி.மு.க என்ற கட்சி தமிழ்நாட்டை தவிர வேறு எங்காவது இருக்கிறதா. கும்மிடிப்பூண்டியை தாண்டாத கட்சியை சேர்ந்தவர்களை பிரதமராக்குவோம் எனப் பேசுவதை எப்படி சீரியஸாக எடுத்துக் கொள்ள முடியும்.
எம்.பி-க்கள் எண்ணிக்கையாவது வைத்திருக்கிறாரா என்றால் அதுவும் ஒரு எம்.பி, அவரும் தற்போது எடப்பாடியோடு இல்லை. ஆளும்கட்சியாக இருந்தபோதே ஒரு எம்.பியை மட்டுமே பெற்றார்கள், இப்போதோ எதிர்க்கட்சியாக இருக்கிறார்கள். இந்நிலையில் வந்து பிரதமராவோம் எனப் பேசினால் சிரிப்புவாராதா?”.என வினவினார் நகைத்தபடி.
நம்மிடம் பேசிய அ.தி.மு.க ஐடி விங் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார், ``இந்தியா முழுக்க கட்சி இருக்கிறதா என பா.ஜ.கவினர் கேட்கிறார்களே, எல்லா மாநிலங்களிலும் கட்சி வளர்த்துதான், வி.பி சிங், தேவகவுடா, ஐ.கே குஜ்ரால் போன்றவர்கள் பிரதமரானார்களா? ஒரு விவசாயியை பிரதமராகவும் பிரதமர் இடத்திலும் வைத்து பார்க்க அவர்கள் விரும்பவில்லை. அதோடு ஒரு தமிழரை பிரதமர் அந்தஸ்த்தில் வைத்துப் பார்க்க ’ப்ரவுட் கன்னடிகா-வுக்கு’ மனமில்லை என்பதைதான் காட்டுகிறது. கிளைச் செயலாளர் பதவியிலிருந்து உழைப்பால் முன்னேறி பொதுச் செயலாளராகியுள்ளார் எடப்பாடி.
ஒரு விவசாயியை பிரதமராகவும் பிரதமர் இடத்திலும் வைத்து பார்க்க அவர்கள் விரும்பவில்லை. அதோடு ஒரு தமிழரை பிரதமர் அந்தஸ்த்தில் வைத்துப் பார்க்க ’ப்ரவுட் கன்னடிகா-வுக்கு’ மனமில்லை என்பதைதான் காட்டுகிறது. கிளைச் செயலாளர் பதவியிலிருந்து உழைப்பால் முன்னேறி பொதுச் செயலாளராகியுள்ளார் எடப்பாடி.
அதைப்போலத்தான் பிரதமர் மோடியும், டீ விற்றவர் பிரதமராகியிருக்கிறார். எடப்பாடி பிரதமர் என்றால் நக்கல் செய்வார்களேயானால் பிரதமர் மோடியை பார்த்து நக்கல் செய்வதாகத்தான் புரிந்து கொள்ள முடிகிறது. ஐ.பி,எஸ் பொறுப்பிலிருந்து பாதியில் வந்து, 39 வயதில் ஒருவரால் மாநிலத் தலைவராக முடியும் என்றால் 50 ஆண்டுக்கால அரசியல் அனுபவம் கொண்ட எடப்பாடியால் பிரதமராக முடியாதா" என்றார் காட்டமாக.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/FHglm12
No comments