"வரலாறு பார்த்துக் கொண்டிருக்கிறது; போரை நிறுத்த அழைப்பு விடுங்கள் பைடன்!" - ஹாலிவுட் நடிகர்கள்
இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் இடையே தொடங்கிய போர், 15 நாள்களைக் கடந்துவிட்டது. காஸாவில் இதுவரை 4,137-க்கும் அதிகமான பாலஸ்தீனர்களும், இஸ்ரேலில் 1,400-க்கும் அதிகமானவர்களும் இந்தப் போரில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தப் போரால் காஸா நகரில் தண்ணீர், உணவு, மருந்து பற்றாக்குறையால் அவதிப்படும் மக்களுக்குத் தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை ஐ.நா-வின் பல்வேறு ஏஜென்சிகள் வழங்கின. எகிப்தின் ராஃபா பகுதி வழியாக காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் செல்ல இஸ்ரேல் அனுமதித்தது.
இந்த நிலையில், காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போரை நிறுத்த அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு சூசன் சரண்டன், கிறிஸ்டன் ஸ்டீவர்ட், குயின்டா புருன்சன், ரமி யூசுப், ரிஸ் அகமது மற்றும் மஹர்ஷலா அலி, உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் நடிகர்கள் கடிதம் ஒன்றை எழுதி வலியுறுத்தியிருகின்றனர். அந்தக் கடிதத்தில், "உங்கள் நிர்வாகத்திடமும், உலகில் உள்ள அனைத்து தலைவர்களிடமும், புனிதமான இந்த பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் மதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
சிறிதும் தாமதமின்றி போர் நிறுத்ததுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். காஸா மீதான குண்டுவெடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பணயக்கைதிகளை பாதுகாப்பாக விடுவிக்கவும் உங்களை வலியுறுத்துகிறோம். நமது எதிர்கால சந்ததியினரிடம், கொடூரமான இந்தப் போரின் காலத்தில், நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக எதுவுமே செய்யாமல் மவுனமாக இருந்தோம் எனச் சொல்ல விரும்பவில்லை. காஸாவில் இருக்கும் பாதி மக்கள் தொகையான இரண்டு மில்லியன் குடியிருப்பாளர்கள் குழந்தைகள், மற்றும் மூன்றில் இரண்டு பங்கு அகதிகள், அவர்களது சந்ததியினர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
மனிதாபிமான உதவி அவர்களை விரைவில் சென்று சேர அனுமதிக்கப்பட வேண்டும். கடந்த ஒன்றரை வாரத்தில் 5,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மனசாட்சி உள்ள எந்தவொரு நபருக்கும் இது பேரழிவு என்று தெரியும். எந்த நம்பிக்கையாக இருந்தாலும், இனம் எதுவாக இருந்தாலும் அனைத்து உயிர்களும் புனிதமானவை என்பதை நாங்கள் நம்புகிறோம். பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலிய குடிமக்கள் கொல்லப்பட்டதை நாங்கள் கண்டிக்கிறோம்.
உயிரைக் காப்பாற்றுவது ஒவ்வொருவரின் தார்மீக கட்டாயமாகும். ஐ.நாவின் அவசரகால நிவாரண தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் சொன்னதைப்போல ‘வரலாறு பார்த்து கொண்டிருக்கிறது’ என்பதை நினைவில் கொள்ளுமாறும் கெத்துகொள்கிறோம். மனிதாபிமான உதவிகள் அவர்களை விரைவாக சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/hFS8sWA
No comments