Tamil News Today Live: சாலையில் மயங்கி கிடந்த வாலிபர்... உதவிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
சாலையில் மயங்கி கிடந்த வாலிபர்... உதவிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
சென்னை மதுரவாயலில் நேற்று கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற போது, மேற்கு சி.ஐ.டி நகர் அருகே சிலர் கூட்டமாக நின்றனர். அப்போது காரை நிறுத்து என்னவென்று விசாரித்த போது, மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் தனது காரில் அந்த வாலிபரை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். பின்ன்ர், வேறு ஒரு காரில் அமைச்சர் பொதுக்கூட்டத்துக்குச் சென்றார். மேலும் மருத்துவமனையை தொடர்பு கொண்டு வாலிபரின் உடல் நிலை குறித்தும் விசாரித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
from India News https://ift.tt/NecAipu
No comments