Breaking News

தமிழகத்தில் கரோனா 2-ம் அலையை தடுக்க அரசு நடவடிக்கை; மினி கிளினிக்குகளில் தடுப்பூசி போட அனுமதி: ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்கவும் அறிவுறுத்தல்

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி பணியை விரிவுபடுத்தும் வகை யில், மினி கிளினிக்குகளில் தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கவும் கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன்தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தி, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். தமிழகம் சார்பில் இக்கூட்டத்தில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், டிஜிபி ஜே.கே.திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eYROOD
via

No comments