மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் தீப்பெட்டி ஆலைகளில் நாளை முதல் உற்பத்தி நிறுத்தம்: 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்
மூலப் பொருட்கள் விலையேற்றத்துக்கு தீர்வு காண வலியுறுத்தி, தமிழகத்தில் தீப்பெட்டி ஆலைகள் நாளை முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
தமிழகத்தில் தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 400 இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இவற்றுக்காக 3 ஆயிரம் பேக்கேஜிங் பிரிவுகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் சுமார் 4 லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெறுகின்றன. 90 சதவீதம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இத்தொழில் சமீப காலமாக அழிவை நோக்கி செல்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/391vDDI
via
No comments