Breaking News

புதுக்கோட்டை அருகே விராலிமலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர் வீட்டில் வருமான வரி சோதனை நிறைவு: பணம், ஆவணங்கள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வடக்கு ஆசாரி தெருவைச்சேர்ந்தவர் எம்.வீரபாண்டியன். புதுக்கோட்டை மாவட்ட காசநோய்பிரிவு பணியாளரான இவர், அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் அண்ணனுக்கு உதவியாளராக வும், அவருக்கு சொந்தமான கல்லூரியையும் கவனித்து வந்தார். இந்நிலையில், விராலிமலையில் உள்ள வீரபாண்டியனின் வீட்டில் வருமானவரித் துறையினர் நேற்று முன்தினம் மதியத்திலிருந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், அதனருகே வீரபாண்டியனுக்கு சொந்தமான 6 வீடுகளைக் கொண்ட குடியிருப்பிலும் சோதனை மேற் கொள்ளப்பட்டது.

விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம், பரிசுப் பொருட்கள் வீரபாண்டியனின் வீடு மற்றும் சில இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும், விநியோகத்துக்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்ததாகவும் கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/31td33f
via

No comments