Tamil News Today Live: பாஜக vs காங்கிரஸ்... ராஜஸ்தானில் தொடங்கியது வாக்குப்பதிவு!
ராஜஸ்தானில் தொடங்கியது வாக்குப்பதிவு!
ராஜஸ்தானில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. பாஜக - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவும் மாநிலமாக ராஜஸ்தான் இருக்கிறது. தற்போது அங்கு காங்கிரஸ் ஆட்சி இருக்கும் நிலையில், பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க கடுமையாக முயற்சி செய்கிறது. இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு ராஜஸ்தானில் வாக்குப்பதிவு தொடங்கியது. மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் கனமழை... பள்ளிகளுக்கு விடுமுறை!
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு முதல், இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 7 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதே போல, செங்கல்பட்டு மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
from India News https://ift.tt/XifIMpu
No comments