முதல்வர் ஸ்டாலினின் ‘பாராமுகம்’ - பதவி உயர்வு கனவில் 30,000 போலீஸார்
சேலம்: தமிழக முதல்வரின் ‘பாரா முகத்தால்’ காவல் துறையில் முதல்நிலை, தலைமை காவலர்கள், எஸ்எஸ்ஐ பதவி உயர்வுக்காக மாநிலம் முழுவதும் 30 ஆயிரம் போலீஸார் காத்திருக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழக காவல் துறையில் டிஜிபி முதல் காவலர்கள் வரையிலான பணியில் 1.50 லட்சம் போலீஸார் வரை பணியாற்றி வருகின்றனர். காவல் துறையில் பணியாற்றி வரும் போலீஸாருக்கு ‘சர்வீஸ் ’ அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது வழக்கம். இதன்படி, இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருபவர்கள் 10 ஆண்டு பணி மூப்பு அடைந்ததும், முதல் நிலை காவலராக பதவி உயர்வு வழங்கப்படும். அதேபோல, முதல் நிலை காவலராக 15 ஆண்டு பணி மூப்பு அடைந்தவர்களுக்கு தலைமை காவலராகவும், 20 ஆண்டு பணி மூப்பு அடைந்தவர்களுக்கு எஸ்எஸ்ஐ (சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்) பதவி உயர்வு வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cTlAImY
via
No comments