வானதியுடன் விவாதிக்க மாணவர் அணி போதும் பிரதமருடன் விவாதிக்க கமல் தயாா்: ஸ்மிருதி இரானிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி பதில்
பிரதமர் நரேந்திர மோடியுடன் கமல்ஹாசன் விவாதிக்க தயார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொது செயலாளர் சி.கே.குமாரவேல் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பதில் அளித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘‘மக்களுடைய பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள், ஆட்சி நிர்வாகம் பற்றிய புரிதல் தொடர்பாக வானதி சீனிவாசனுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விவாதம் செய்ய தயாரா?” என்று சவால் விடுத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3w9YIa7
via
No comments