தேர்தல் நேரத்தில் மீண்டும் தலைதூக்கிய சரக்கு பெட்டக துறைமுக பிரச்சினை: குமரியில் கிறிஸ்தவ ஆலயங்கள் முன்பு போராட்டம்
தேர்தல் நெருங்கும் வேளையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுக எதிர்ப்பு போராட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. கிறிஸ்தவ ஆலயங்கள் முன்பு நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத் தில் கோவளம், கீழமணக்குடி இடையே உள்ள கடல் பகுதியில் ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பன்னாட்டு சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்க, மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு முயற்சி மேற் கொண்டது. இதற்கு மீனவ கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் சரக்கு பெட்டக துறைமுகத்துக்கு எதிராக மீனவ மக்கள் மற்றும் கடற்கரை பகுதி மக்களின் வாக்கு திரும்பியது. தேர்தலின்போது துறைமுகத்துக்கு எதிரான பிரச்சாரங்கள், போராட்டங்கள் தீவிரமாக இருந்தன. தேர்தலில் காங்கிரஸ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சரக்கு பெட்டக துறைமுகத் திட்டம் தொடர்பான பேச்சு அதன்பிறகு இல்லாமல் இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qMjIjd
via
No comments