மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு 12 நிறுவனங்களுடன் தொடர்பு: வருமான வரித் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு 12 தனியார் நிறுவனங்களுடன் உள்ள தொடர்பு குறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை. இவரது கணவர்சபரீசன். அரசியலில் மு.க.ஸ்டாலினின் நிழல்போல செயல்பட்டு, பல்வேறு பணிகளை செய்து வருகிறார். திமுகவுக்கான தேர்தல்வியூகங்களை அமைத்து கொடுக்கபிரசாந்த் கிஷோரை அழைத்து வந்ததும் சபரீசன்தான். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் இருந்துதான் பணப்பரிமாற்றம் செய்யப்படுவதாக வருமானவரித் துறைக்கு தகவல் கிடைத்ததாகவும் அதன்பேரிலேயே நேற்று முன்தினம் சபரீசன் மற்றும் அவரது நண்பர்களின் வீடுகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QTUwef
via
No comments