வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி: பள்ளிகொண்டா அருகே பாமகவினர் 3 பேர் கைது - ரூ.4 லட்சத்துடன் காரும் பறிமுதல்
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியில் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட அதிமுக வேட்பாளர் வேலழகனுக்கு ஆதரவாக பணம் விநியோகம் செய்யப்படுவதாக நேற்று முன்தினம் இரவு மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், பள்ளிகொண்டா பகுதியில் இருந்த பறக்கும் படை குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்களைப் பார்த்ததும் பணம் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்த காரில் ஏறி தப்பினர். அந்த கார் வேலூர் நோக்கி வேகமாகச் சென்றது. அந்த காரை விடாமல் விரட்டிய பறக்கும் படை அதிகாரிகள் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wqnCT3
via
No comments