Breaking News

தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அலுவலர்களுக்கு கரோனா தடுப்பூசி கட்டாயம்: பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் உத்தரவு

பொதுப்பணித் துறை கட்டிடப் பிரிவு அலுவலர்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று முதன்மை தலைமைப் பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதல்படி 45 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஏப்ரல் 14 முதல் 16 வரை ‘தடுப்பூசி திருவிழா’ என்ற அடிப்படையில் குறிப்பிட்ட வயதுக்குள் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. மேலும், முன்களப் பணியாளர்கள், அரசு அலுவலர்களில் 45 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முதல்வர் பழனிசாமியும் அறிவுறுத்தியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mKX9eh
via

No comments