Breaking News

அமைந்தகரை மேத்தா நகரில் உள்ள ஸ்ரீயோக ஆஞ்சநேயர் கோயிலில் விமரிசையாக நடந்த கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

அமைந்தகரை மேத்தா நகர் ஸ்ரீயோக ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

சென்னை அமைந்தகரை மேத்தா நகர் அவ்வையார் தெருவில் உள்ள யோக ஆஞ்சநேயர் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருப்பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், கடந்த 31-ம் தேதி பூமி பூஜை நடத்தப்பட்டது. 1-ம் தேதி யாகசாலையை சுத்தம் செய்து யாகங்கள் நடைபெற்றன. பிறகு, கோ பூஜை செய்யப்பட்டு மகா சாந்தி திருமஞ்சனமும், பள்ளியறை சேவையும் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cLmfq9
via

No comments