Breaking News

தமிழக மக்களிடமே கோயில்களை ஒப்படைக்க வேண்டும்: முதல்வர், எதிர்க்கட்சித் தலைவருக்கு சத்குரு கடிதம்

தமிழக மக்களிடமே கோயில்களை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சத்குரு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: 3 கோடிக்கும் மேற்பட்ட தமிழரின் நெஞ்சார்ந்த விருப்பத்தை இதன்மூலம் தெரிவிக்கிறேன். தமிழகத்தின் ஆன்மாவை முழு பொலிவுக்கு மீட்டெடுத்தவராய் நீங்கள் என்றென்றும் நினைவுக் கூரப்பட, பொறுப்புள்ள அரசியல் தலைவர்களாக திராவிட பெருமையின் மையமான கோயில்களை விடுவிக்குமாறு மன்றாடி கேட்கிறேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2PTPPkk
via

No comments