Breaking News

அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்தை சீரழிக்கும் மதுக்கடைகள் முற்றிலுமாக தடை செய்யப்படும்: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டம்

தளி தொகுதி பாஜக வேட்பாளர் நாகேஷ்குமார் மற்றும் ஓசூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கெலமங்கலம் அருகே நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பாஜக மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாதுகாப்புத் துறைஅமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது:

நம் இந்திய மக்களுக்கு தடுப்பூசி வழங்கி கரோனா வைரஸ் நோயிலிருந்து பாதுகாத்தது மட்டுமன்றி உலக மக்களுக்கும் கரோனா தடுப்பூசி வழங்கி பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார். மேலும் வெண்டிலேட்டர் மற்றும்பி.பி.கிட் ஆகியவை தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க, இந்திய அளவில் மற்றும் உலகளவில் அவற்றை வழங்கி உலகையே காப்பாற்றிய பெரிய தலைவராக மோடி உயர்ந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fwHFsI
via

No comments