Breaking News

தொங்குமலை - நம்மியம்பட்டு இடையே தரமற்ற தார் சாலை: மலை கிராம மக்கள் குற்றச்சாட்டு

வேலூர் மாவட்டம் தொங்குமலை மலை கிராமத்தில் இருந்து தி.மலை மாவட்டம் நம்மியம்பட்டு இடையில் அமைக்கப்படும் தார்ச்சாலை கையில் பெயர்த்து எடுக்கும் நிலையில் மோசமாக இருப்பதாக மலை கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள மலை கிராம ஊராட்சிகளான பீஞ்சமந்தை, அல்லேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இவர்கள், தொழில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வேலூர் மாவட்டத்தை நம்பியுள்ளனர். இந்தப் பகுதிக்கான அடிப்படை வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aTpZV0
via

No comments