Breaking News

பசுமை தீர்ப்பாய சென்னை அமர்வின் தற்காலிக உறுப்பினராக சத்யகோபால் நியமனம்

சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வின் தொழில்நுட்ப உறுப்பினராக முன்னாள் வருவாய் நிர்வாகஆணையர் கே.சத்யகோபால் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மண்டல அமர்வுகளில் காலியாக உள்ள நீதித்துறை உறுப்பினர், தொழில்நுட்ப உறுப்பினர் இடங்களுக்கு உறுப்பினர்களை நியமித்து பசுமை தீர்ப்பாய தலைவர்கடந்த வாரம் உத்தரவிட்டார். அதன்படி, புணேயில் உள்ள பசுமைதீர்ப்பாயத்தின் மேற்கு மண்டலஅமர்வின் நீதித்துறை உறுப்பினராக எம்.சத்தியநாராயணன், தொழில்நுட்ப உறுப்பினராக கே.சத்யகோபால், சென்னையில் உள்ள தென் மண்டல அமர்வின்தொழில்நுட்ப உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன்படி, சத்யகோபால் புணேவில் உள்ள அமர்வில் பணியில் சேர்ந்துவிட்டார். சென்னை மண்டல அமர்வின் தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா கொல்கத்தா அமர்வுக்கு மாற்றப்பட்டார். சென்னை அமர்வின் தொழில்நுட்ப உறுப்பினர் பதவியில் கிரிஜா வைத்தியநாதனை நியமிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mFote5
via

No comments