Breaking News

படிக்கல் அசத்தல் சதம்: கோலி புதிய சாதனை: ஆர்பிசி அணி பிரமாண்ட வெற்றி: கடைசி இடத்தில் ராஜஸ்தான்


தேவ்தத் படிக்கலின் அபாரமான சதம், கேப்டன் கோலியின் அரைசதம் ஆகியவற்றால் மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது. 178 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி 21 பந்துகள் மீதமிருக்கையில் 181 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tIXnW9

No comments