Breaking News

கேரளாவில் இருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்ற கன்னியாகுமரி, மேற்கு வங்க மீனவர்கள் 16 பேர் ‘டவ் தே’ புயலில் மாயம்

கேரளாவில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் ‘டவ் தே’ புயலில் மாயமாகினர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த ஆரோக்கிய ராபி, மகேந்திரன், கொட்டில்பாடைச் சேர்ந்த சகாய ஆன்றனி, அலெக்ஸாண்டர், ஆன்றனி, கடியப்பட்டினத்தை சேர்ந்த மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்ட 12 மீனவர்கள் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் என மொத்தம் 16 பேர் கேரளாவில் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uh2Kel
via

No comments