``இந்தியா கூட்டணி மத நம்பிக்கைகளை புண்படுத்துகிறது..!" - திருச்சூரில் பிரதமர் மோடி
கேரள மாநிலம் திருச்சூரில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட 'மகிளா சம்மேளனம்' என்ற பா.ஜ.க மகளிர் மாநாடு நடந்தது. குட்டநல்லூரில் இருந்து திருச்சுர் பூரம் விழா நடக்கும் தேக்கின்காடு மைதானம் வரை பிரதமர் மோடி ரோட் ஷோ நடத்தினார். அப்போது பிரதமர் மோடியின் வாகனத்தில் கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன், திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியை குறிவைத்து வேலைசெய்யும் நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். தேக்கின்காடு மைதானத்தில் பிரமாண்ட மகிளா சம்மேளனம் நடைபெற்றது.
அதில் பிரதமர் மோடி பேசுகையில், "ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் என நான்கு பிரிவினர்களின் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. இடதுசாரி மற்றும் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இந்த நான்கு பிரிவினரின் பிரச்னைகள் கண்டுகொள்ளப்படவில்லை.
பத்து ஆண்டு ஆட்சியில் மகளிரின் வாழ்வாதார பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி உள்ளோம். 10 கோடி உஜ்வாலா காஸ் மோடியின் கேரண்டியாகும். 12 கோடி குடும்பங்களுக்கு கழிவறைகள் அமைத்துக் கொடுத்தது மோடி கேரண்டியின் கேரண்டி ஆகும். ராணுவ பள்ளிகளிலும், சட்டமன்ற, நாடாளுமன்றங்களிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது மோடி கேரண்டியாகும். 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீட்டு திட்டம், உலகில் எங்கு பிரச்னைகள் நடந்தாலும் மலையாளிகளை திரும்ப அழைத்து வருவதும் மோடியின் கேரண்டியாகும்.
தங்கம் கடத்தல் யாருடைய அலுவலகத்தில் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். பல காலமாக இடது, வலது முன்னணிகள் கேரளாவில் வஞ்சனை நாடகங்கள் நடத்தி வருகின்றன. இரண்டு முன்னணிகளும் சேர்ந்து ஊழலும், குடும்ப ஆட்சியும் நடத்துகின்றன. இந்தியா கூட்டணியை ஏற்படுத்தி அவர்கள் ஒன்று என காட்டி உள்ளனர். இந்தியா கூட்டணி மத நம்பிக்கைகளை புண்படுத்துவதுடன், ஆச்சாரங்களுக்கு இடையூறு ஏற்படுத்திவருகின்றன. அனைத்து மத வழிபாடுகளையும் பா.ஜ.க மதிக்கிறது.
கிறிஸ்துமஸ் விருந்துக்கு வந்த கிறிஸ்தவ மத தலைவர்கள் மத்திய அரசை பாராட்டினார்கள். கேரளா முன்னேற வேண்டுமானால் பா.ஜ.க ஆட்சிக்கு வரவேண்டும்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பி.டி.உஷா, கிரிக்கெட் பிரபலம் மின்னுமணி, நடிகை ஷோபனா, அடிமாலியில் சி.பி.எம் ஆட்சிக்கு எதிராக மண் சட்டி சமரம் நடத்திய மரிய குட்டி, வைக்கம் விஜயலெட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/uCMWP2B
No comments