18-44 வயதினருக்கான திட்டம் முழுமையாக தொடங்கப்படாததால் தடுப்பூசி போட வந்த இளைஞர்கள் ஏமாற்றம்: கையிருப்பு இல்லை என சுகாதாரத் துறையினர் தகவல்

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிமுழுமையாக தொடங்கப்படாததால், மருத்துவமனைகளுக்கு சென்ற இளைஞர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
‘நாடு முழுவதும் 18 வயதுக்குமேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மே 1-ல் தொடங்கப்படும். இதற்கு அந்தந்த மாநிலஅரசுகளே தடுப்பூசிகளை கொள்முதல் செய்துகொள்ளலாம்’ என்று மத்திய அரசு தெரிவித்தது. தமிழகத்தில் இதை செயல்படுத்த அப்போதைய முதல்வர் பழனிசாமி 1.50 கோடி தடுப்பூசிகளை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்ய உத்தரவிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vaULku
via
No comments