நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கிய வெளிநாடு வாழ் காரைக்குடி சிறுவன்
காரைக்குடியில் தமிழக மக்கள் மன்றத்தினர், சமூக ஆர்வலர்கள் இணைந்து அரசு மருத்துவமனைக்கு ரூ.11 லட்சம் மதிப்புள்ள 13 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினர். காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சுரேந்திரன், டிஎஸ்பி அருண், வட்டாட்சியர் அந்தோணிராஜ், தலைமை மருத்துவர் தர்மர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேவகோட்டை நேமம் கோயில் நகரத்தார்கள் முதல் கட்டமாக ரூ.2.5 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள், முகக்கவசங்கள், கிருமி நாசினி ஆகியவற்றை தேவகோட்டை வருவாய்த் துறையினரிடம் வழங்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vnc1D9
via
No comments