Breaking News

66-வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் இளவேனில்

புதுடெல்லி: 66-வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் டெல்லியில் நடைபெற்றது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் குஜராத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார்.

8 பேர் கொண்ட இறுதிப் போட்டியில் இளவேனில் வாலறிவன் 253.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். ஹரியாணாவின் ரமிதா ஜின்டால் 252.5 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், அதே மாநிலத்தைச் சேர்ந்த நான்சி வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JRs0LhV

No comments